Published : 08 Jan 2021 03:56 PM
Last Updated : 08 Jan 2021 03:56 PM

தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி

தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஜனவரி மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வருமாறு:

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இயல்பான வெப்பநிலை நிலவும்.

முதல் வாரத்திற்கான மழை அளவு: (ஜனவரி 07 முதல் 13 வரை): தென்கிழக்கு அரபிக் கடல், தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால், கேரளா, மாஹேவில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 2020 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக தென் இந்திய தீபகற்பத்தில் ஏற்பட்ட நிகழ்வு: தென் தீபகற்பத்தின் வானிலை ஆய்வு துணை பிரிவுகளான தமிழ்நாடு கடற்கரை ஆந்திரப்பிரதேசம் ராயலசீமா கேரளா, கர்நாடகா ஆகியவை கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சுமார் 30% மழையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பருவ காலத்தில் தமிழ்நாட்டில் 48 சதவீத மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x