Published : 06 Jan 2021 04:12 PM
Last Updated : 06 Jan 2021 04:12 PM
நாட்டில் அடுத்து நடக்கும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரரும், வழக்கறிஞருமான சிஆர் ஜெயா சுகின் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அறிவுறுத்தினார்.
மனுதாரரும், வழக்கறிஞருமான சிஆர் ஜெயா சுகின் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடுமுழுவதும் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாரம்பரிய முறையாந வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்துவதுதான் வெளிப்படைத்தன்மையான முறை, மிகவும் நம்பகமாந முறையான இருக்கிறது. எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கு நடக்கும் தேர்தல்களில் வாக்குசீட்டு முறையதான் நடைமுறையில் இருக்கிறது.
ஜனநாயகத்தைக் காக்க நாம், கண்டிப்பாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் தேர்தல் முறையில் அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் முறையை மாற்றிவிட்டுக இவிஎம் எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
ஆனால், வளர்ந்த நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகியவை இவிஎம் எந்திரங்களை நீக்கிவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு வந்துள்ளன. இதன் மூலம் இவிஎம் எந்திரங்கள் மூலம் நடக்கும் வாக்குப்பதிவு நம்பகத்தன்மை உடையதாக ஒருநாட்டுக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் 324ன்படி, தேர்தல் ஆணையம் மிகவும் சுதந்திரமான, நியாயமான , வாக்காளர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது. இவிஎம் எந்திரங்களை ஹேக்கிங் செய்ய முடியும், முடிவுகளை மாற்ற முடியும், எளிதில் சேதப்படுத்தி, வாக்குகளை மாற்றியமைக்க முடியும். ஆனால், வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பானவை.
பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் இவிஎம் வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொலைக்காட்சி, மற்றும் நாளேடுகள், தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. நாட்டின் தேர்தல் ஜனநாயக முறைக்கு இவிஎம் எந்திரங்கள் மனநிறைவானது அல்ல என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்”எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரும், வழக்கறிஞருமான ஜெயா சுகின் ஆஜராகினார்.
அப்போது, விசாரணையின் போது மனுதாரரிடம் தலைமை நீதிதபதி,” அடிப்படைஉரிமை இதில் எந்த இடத்தில் கேள்விக்குள்ளாகுகிறது. எவ்வாறு மீறப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் ஜெயா, “ வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிைம” எனத் தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி பாப்டே, “ எப்போது இருந்து, வாக்களிப்பது அடிப்படை உரிமையாக மாறியது” எனக் கேட்டு, இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்க இயலாது, மாநில உயர் நீதிமன்றத்தை மனுதார் அணுகலாம் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT