Published : 04 Jan 2021 03:16 PM
Last Updated : 04 Jan 2021 03:16 PM

தூர்தர்ஷன், வானொலிக்கு இந்தியாவுக்கு அடுத்து  பாகிஸ்தானில் அதிக நேயர்கள் 

புதுடெல்லி

2020ம் ஆண்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலிக்கு இந்தியாவில் உள்நாட்டு நேயர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் அதிகளவு டிஜிட்டல் நேயர்கள் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் பிரசர் பாரதி (தூர்தர்ஷன் - அகில இந்திய வானொலி) மிகப்பெரிய டிஜிட்டல் வளர்ச்சியை கண்டது

2020ம் ஆண்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் உள்ள டிஜிட்டல் சேனல்கள், 100 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளன. இதில் 100 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் காட்சிகள், 600 கோடிக்கும் மேற்பட்ட காணும் நிமிடங்களை பதிவாகியுள்ளன.

2020ம் ஆண்டில், அகில இந்திய வானொலியின் செய்தி செயலி, 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர்களை இணைத்துள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட பிரபல நேரடி ரேடியோ நிகழ்ச்சிகளுடன், 300 மில்லியனுக்கும் மேற்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.

பிரசார் பாரதியில் முதல் 10டிஜிட்டல் சேனல்களில், டிடி நேசனல், டிடி நியூஸ் ஆகியவை முன்னணியில் இடம் பெற்றுள்ளன. டி.டி.சஹயாத்ரியின் மராத்தி செய்திகள், டி.டி.சந்தனாவில் கன்னட நிகழ்ச்சிகள், டி.டி. பங்களாவில் பங்களா செய்திகள் மற்றும் டி.டி. சப்தகிரியில் தெலுங்கு நிகழ்ச்சிகளும் இதில் இடம் பிடித்துள்ளன.

டிடி ஸ்போர்ட்ஸ், ஆகாஷ்வாணி ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்களும் நேரடி வர்ணனையுடன் டிஜிட்டல் பதிவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளன. பிரசார் பாரதி ஆர்ச்சீவ்ஸ் மற்றும் டிடி கிசான் போன்றவற்றிலும் டிஜிட்டல் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

அகில இந்திய வானொலி செய்திகளின் வடகிழக்கு சேவைகளும், முதல் 10 இடத்தில் உள்ளன. இதன் டிஜிட்டல் பதிவு 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

சுவாரஸ்யமாக 2020ம் ஆண்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலிக்கு இந்தியாவில் உள்நாட்டு நேயர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் அதிகளவு டிஜிட்டல் நேயர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது.

பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாடிய நிகழ்ச்சிகள், குடியரசு தினவிழா அணி வகுப்பு, டிடி நேசனல் ஆர்ச்சீவ்ஸ்-ல் உள்ள சகுந்தலா தேவி, 1970ம் ஆண்டுகளின் சர்கா ஆகிய வீடியோக்கள், 2020ம் ஆண்டு டிஜிட்டல் வீடியோக்களில் மிகவும் பிரபலமானவை.

சமஸ்கிருத மொழிக்கான, பிரத்யேக பிரசார பாரதி யூ ட்யூப் சேனல், 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் அனைத்து தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய ரேடியோவில் தயாரான அனைத்து சமஸ்கிருத நிகழ்ச்சிகளும் நேயர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மனதின் குரல் நிகழ்ச்சிகளின் யூ ட்யூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் 2020ம் ஆண்டில் 67,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன.

தூர்தர்ஷன் - அகில இந்திய வானொலி நெட்வொர்க்கில், சுமார் 1,500 ரேடியோ நாடகங்கள் பல மொழிகளில் இருக்கின்றன. அவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, யூ ட்யூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான கல்வி நிகழ்ச்சிகள், தொலைதூர கல்வி வகுப்புகள் யூ ட்யூப் சேனல்களில் பல மொழிகளில் தற்போது உள்ளன.

அரிய வரலாற்று நிகழ்ச்சிகள் எல்லாம் தூர்தர்ஷன்- அகில இந்திய வானொலி தளங்களில் மட்டுமே உள்ளன. அவை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பிரசார் பாரதி யூ ட்யூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

பொது மக்கள் நலன் கருதி, பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட முக்கிய இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகளை, ஒரு குழு டிஜிட்டல் மயமாக்கி பதிவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு பொதுவான தளத்தில் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x