Last Updated : 03 Jan, 2021 05:27 PM

 

Published : 03 Jan 2021 05:27 PM
Last Updated : 03 Jan 2021 05:27 PM

உத்தரப் பிரதேசத்தில் தகன மேடைக் கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலி

பிரதிநிதித்துவப் படம்.

காசியாபாத் 

உத்தரப் பிரதேசத்தில் தகன மேடை கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் நடந்த இக்கோர சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் ஈராஜ் ராஜா கூறியதாவது:

முராத்நகரில் உள்ள தகன மைதானத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை ராம் தண் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக அவரது 25க்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்தனர்.

திடீரென மழை பிடித்துக்கொண்டதால் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த தகன மேடையருகே தஞ்சம் புகுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தங்குமிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.

பல மணிநேரங்கள் கழித்து, பலியானவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சென்று பல உடல்களை மீட்டெடுத்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்

இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

இறந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் ரூ .2 லட்சம் நிதி உதவி வழங்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க மீரட் மற்றும் ஏ.டி.ஜி மீரட் மண்டல பிரதேச ஆணையருக்கும் முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x