Published : 02 Jan 2021 09:45 AM
Last Updated : 02 Jan 2021 09:45 AM

தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் சேவைகள் தொடக்கம்

புதுடெல்லி

பல்வேறு பிரிவுகள் மற்றும் சேவைகளில் முக்கியமான மைல்கற்களை 2020- ஆம் ஆண்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் எட்டியுள்ளது. அவற்றில் முக்கியமானவை வருமாறு:

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை இணைந்த திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழுவை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தொடங்கியது.

நாட்டிலுள்ள வானிலை ஆய்வு வலைப்பின்னல் வலுப்படுத்தப்பட்டது. 102 புதிய மாவட்ட வேளாண்-வானிலை கள அலகுகள் 2020-இல் தொடங்கப்பட்டன. 130 வேளாண்-வானிலை கள அலகுகள் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தன.

அம்பான், நிசர்கா மற்றும் நிவர் ஆகிய புயல்கள் குறித்த தகவல்களைத் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் இந்திய வானிலைத் துறை முன் கூட்டியே சொன்னது.

பொதுமக்கள், சமுதாயத் தலைவர்கள், தேசிய மற்றும் உள்ளூர் அவசரகால நிர்வாக முகமைகள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் சுனாமியை எதிர்கொள்ளும் தயார் நிலையை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையிலான கடல்சார் ஆணையம் (IOC) உருவாக்கியுள்ள சமுதாயம் சார்ந்த செயல்திறன் அடிப்படையிலான திட்டமான ”சுனாமி ரெடி”-க்கு இந்தியப் பெருங்கடல் பகுதியிலேயே முதல் முறையாக சான்றிதழும், அங்கீகாரமும் பெறப்பட்டது.

காற்றின் தரத்தை முன் கூட்டியே கணிக்கும் முறைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களை புவி அறிவியல் அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காற்றின் தரம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கும் அதி நவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலைத் துறை செயல்படுத்தியுள்ளது.

இந்தியப் பகுதியில் பருவநிலை மாற்றம் குறித்த திறந்த அணுகல் புத்தகம் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x