Published : 01 Jan 2021 01:20 PM
Last Updated : 01 Jan 2021 01:20 PM
புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் ஏறக்குறைய 60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
உலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10 நாடுகள் அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
அதைத் தொடர்ந்து சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜிரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள், எத்யோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறந்திருக்க கூடும்.
அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்கதேசத்தில் 9,236 குழந்தைகள், காங்கோ குடியரசில் 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 2021-ம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் பிஜி நாட்டில்தான் முதல் குழந்தை பிறந்தது, அமெரிக்காவில் கடைசிக் குழந்தை பிறந்தது.
2021-ம் ஆண்டில், 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இதில் குழந்தையின் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள்சராசரி வயது 80.9 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கிறோம்
இவ்வாறு யுனிசெப் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெப்இந்தியாவின் பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக் கூறுகையில் “ குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதன் லாபத்தை பெற வேண்டுமானால், கரோனாவில் ஏற்பட்ட தாக்கத்தையும்,அதன் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்வதும் அவசியம்.
இந்த தொற்றில் மட்டுல்ல அனைத்து நேரங்களிலும் மக்கள் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் அதற்கான கொள்கைகள், அமைப்பு முறை அவசியம் என்பதை கரோனா தொற்று உணர்த்திவிட்டது.
எங்களின் ரீஇமாஜின் பிரச்சாரத்தின் கீழ், தனியார் துறை நிறுவனங்கள், அரசாங்கங்கள், தன்னார்வலர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து, சிறந்த உலகை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் வாழ உரிமை இருக்கிறது. அந்த குழந்தை பாதுகாக்கப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் என யுனெசெப் கோரி வருகிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT