Published : 31 Dec 2020 03:59 PM
Last Updated : 31 Dec 2020 03:59 PM
இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை கடந்தது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது.
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க இலக்கை கடந்தது.
தேசிய அளவில் குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை (96.04%) தாண்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98.6 லட்சத்தை (98,60,280) கடந்தது. இது உலகளவில் மிக அதிகம். தற்போது சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து தற்போது 96,02,624 ஆக உள்ளது.
மற்றொரு சாதனையாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,57,656-ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.51 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 26,139 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 4,616 பேர் குறைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 299 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT