Last Updated : 03 Oct, 2015 08:50 AM

 

Published : 03 Oct 2015 08:50 AM
Last Updated : 03 Oct 2015 08:50 AM

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பத்திடம் 300 ஆண்டு பழமையான உருது மொழி மகாபாரதம்

உ.பி. தலைநகர் லக்னோவில் ஷாஹின் அக்தர் என்பவரது குடும்பம் வசிக்கிறது. இவர்கள் ராய்பரேலியின் நசீபாபாத் என்ற கிராமத்தில் இருந்து சில ஆண்டு களுக்கு முன் இங்கு வந்துள்ளனர். இவர்கள் தங்கள் பூர்வீக கிராமத்து வீட்டில் இருந்து சுமார் 10,000 நூல்களையும் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நூல்கள் உருது, இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்ஷிய மொழிகளில் உள்ளன. இவற்றில் ஒன்றாக `மகாபாரதம்’ எனும் பெயரி லான உருது நூல் உள்ளது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நூலை ஷாஹின் குடும்பத்தினர் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வரு கின்றனர். இந்த நூல் அவர்களின் கொள்ளுத் தாத்தா தங்கள் பூர்விக கிராமத்தில் அமைத்திருந்த நூலகத் தில் இருந்துள்ளது. துர்கா தத், ஹாஜி தாலீம் உசைன் என்பவர்களால் 10 அத்தியாயங்களில் மகாபாரதம் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. சுமார் 300 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் சில விளக்க உரை கள் பெர்ஷிய, சமஸ்கிருத மொழி களிலும் தரப்பட்டுள்ளன.

நிறம் மங்கிய நிலையில் உள்ள இந்த நூலை அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏராளமான இந்துக்கள் ஷாஹின் வீட்டுக்கு வந்து பார்த்து அதிசயித்தபடி உள்ளனர். இதன் முன்னுரையில் வானம் மற்றும் பூமியில் வாழ்ந்தவர்களை மையமாகக் கொண்டு இந்த நூல் எழுதப்படுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து அக்குடும்பத்தில் பத்திரிகையாளராக இருக்கும் பர்மான் அப்பாஸ் மஞ்சுல் `தி இந்து’ விடம் கூறும்போது, “இந்த நூல் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக எழுதப்பட்டிருக்கலாம். இதை ஒரு புனித நூலாகவே கருதி சேதமாகாமல் பாதுகாத்து வருகிறோம். எங்கள் குடும்பத்தின் பெருமையை பறை சாற்றும் இந்த நூலை எங்களுக்கு விற்க மனமில்லை” என்றார்.

மதக்கலவரத்துக்கு பெயர் போன உத்தரப் பிரதேசம் முற் காலத்தில் அவத் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த பெரும்பாலான நவாபுகள் ஷியா பிரிவு முஸ்லிம்களாக இருந்தனர். இவர்களுக்கு தங்களுடன் வாழ்ந்த இந்துக்களுடன் வலுவான நட்பு இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரு மதத்தவரும் இணைந்து போராடி வந்தனர். இதனால் இரு தரப்பிலும் இன்றும் சில மதரீதியான சடங்குகள் பண்டிகைக் காலங்களில் தொடர்கின்றன. எனவே ஷாஹின் குடும்பத்தினரிடம் இருக்கும் மகாபாரதம் நூலை ஆய்வு செய்வதன் மூலம் பல அரிய வரலாறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x