Published : 29 Dec 2020 09:53 AM
Last Updated : 29 Dec 2020 09:53 AM
கோவிட் கண்காணிப்புக்கு ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டுதல்களை, 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்கள், புதிய பாதிப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தாலும், உலகளவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பதாலும், இங்கிலாந்தில் புதிய வகை கொரோன வைரஸ் தோன்றியுள்ளதாலும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அதற்கேற்ப, கட்டுப்பாட்டு மண்டலங்களை தொடர்ந்து கவனமாக வரையறுக்க வேண்டியுள்ளது. அந்தக் கட்டுபாட்டு மண்டலங்களுக்குள், பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். கோவிட்டுக்கு ஏற்ற நடத்தைகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும்; மற்றும் அனுமதிக்கப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் துல்லியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
அதனால், கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தலில் கவனம் செலுத்தும் அணுகுமுறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 25.11.2020ஆம் தேதி பிறப்பித்த வழிகாட்டுதல்கள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT