Last Updated : 28 Dec, 2020 07:33 AM

3  

Published : 28 Dec 2020 07:33 AM
Last Updated : 28 Dec 2020 07:33 AM

இத்தாலி புறப்பட்டார் ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியின் நிறுவன விழாவில் பங்கேற்பு இல்லை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று காலை டெல்லியிலிருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளார் என்று மட்டுமே தகவல் தெரிவிக்கின்றன. எந்தநாட்டுக்கு ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார் என்று தெரிவிக்கவில்லை. ஆனால், மூத்த தலைவர் சிலர் ராகுல் காந்தி, தனது தனிப்பட்ட பயணமாக இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

டெல்லியிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இத்தாலி கிளம்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் தாய் வழி பாட்டி இத்தாலியில் வசித்து வருகிறார். அண்மையில் கூட ராகுல் காந்தி இத்தாலி சென்று தனது பாட்டியை சந்தித்து விட்டு வந்தார். தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைைம செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ ராகுல் காந்தி சொந்த காரணங்களுக்காக சில நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவலை அவர் சொல்லவில்லை.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், ராகுல் காந்தி திடீரென்று இத்தாலி சென்றது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட் கூறுகையில், ராகுல் காந்தி விவசாயிகளின் தர்ணா பகுதிக்கு வரவில்லை அவரை பார்க்கவும் முடியவில்லை அவர் யாருடனும் பேசவில்லை. எங்களது எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்ாடாடப்படும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

மாநில காங்கிரஸ் அமைப்புகள் பேரணிகள், பிரசசாரங்கள் நடத்த வேண்டும். சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைத்து எம்.பி. எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால்,ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 2 கோடி விவசாயிகளின் கையொப்பம் பெற்ற மனுவை குடியுரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்திடம் ராகுல் காந்தி தலைமையிலான குழுதான் வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அந்த மாநிலத்தின் வயநாடு எம்.பி. எனும் முறையில் ராகுல் காந்தி அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மாநிலப் பொறுப்பாளர் தாரிக் அன்வர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x