Last Updated : 27 Dec, 2020 03:14 AM

 

Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

தமிழில் தயாராகிறது பிரதமர் மோடியின் இந்தி நூல் ‘அன்னையின் திருவடிகளுக்கு…’ என்ற பெயரில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியின் ‘சாட்சே’ என்ற இந்தி நூல் விரைவில் தமிழில் வெளியாகிறது. “அன்னையின் திருவடிகளுக்கு…’ என்ற பெயரில் இதனை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது.

பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தபோது, சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த 1986 முதல்குறிப்புகளை எழுதி வந்துள்ளார். லோக மாதா, ஜெகத் மாதா, ஜெகத் ஜனனி, ஜெகதாம்பா என கடவுளிடம் முறையிடுவது போல் இவற்றை மோடி எழுதியுள்ளார்.

இவற்றை அவருடன் தங்கிப் பணியாற்றிய நெருங்கிய நண்பர் நரேந்தரபாயீ பஞ்சஸாராபடித்து வியந்துள்ளார். குஜராத்தியான அவர், மோடி எழுதியதைபத்திரப்படுத்தி வைக்குமாறுவேண்டியுள்ளார். இதை மற்றொரு குஜராத்தியான சுரேஷ்பாயீ தலால் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். மோடி பிரதமரான பிறகு சமூக வளர்ச்சிக்கான அவரது கருத்துகளை நூலாக வெளியிடும் பணியில் சுரேஷ் பாயீ இறங்கினார். ஆனால் அப்பணி முடியும் முன் அவர் இறந்ததால் அவரது குடும்பத்தினர் அந்நூலை இந்தியில் ‘சாட்சே’ (சாட்சியம்) என்ற பெயரில் 2020-ல் வெளியிட்டுள்ளனர்.

பிறகு ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலை அனைத்துஇந்திய மொழிகளிலும் வெளியிடபிரதமர் விரும்பியுள்ளார். 2014-ல்பிரதமராகப் பதவி ஏற்றது முதல் தமிழ் மீது ஆர்வம் காட்டி வரும் பிரதமர் முதலில் அந்த நூலை தமிழில் வெளியிட விரும்பியுள்ளார்.

‘அன்னையின் திருவடிகளுக்கு…’ என்று பெயரிடப்பட்ட அந்நூலை தமிழ் மற்றும் இந்தி மொழி அறிஞரான டாக்டர் எம்.கோவிந்தராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். உ.பி.யின் அலகாபாத்தில் உள்ள பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளரான இவர், பக்தி இலக்கியம் முதல்பல தமிழ் நூல்களை இந்தியில்திறம்பட மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த பிரதமரின் நூலை, சென்னையின்அல்லயன்ஸ் கம்பெனி வெளியிடுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அல்லயன்ஸ் நிவாசன் கூறும்போது, “கேட்டறிதலால் பிரதமருக்கு வள்ளுவர்,பாரதியார் மீது ஈடுபாடு வளர்ந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது வீட்டு நூலகத்தில் திருக்குறளின் அனைத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளும், பாரதியார் கவிதைகளும் இருந்ததை நான் நேரில் பார்த்துள்ளேன். தமிழ் மீதான ஆர்வத்தால் பிரதமர் தனது நூலை முதலில் தமிழில் வெளியிட விரும்பி, அவரது அலுவலகம் மூலம் எனக்கு அனுப்பப்பட்டது” என்றார்.

மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, பொது மற்றும் பெண் சமூகம் மீதான அவரது எண்ணங்கள் இந்தியில் நூல்களாக வெளியாகி உள்ளன. இவற்றில் நான்கு நூல்களை தமிழில் வெளியிட அப்போது அவர் விரும்பினார். இதன் முதல்நூலை தமிழில் ‘கல்வியே கற்பகத்தரு’ என்ற பெயரில் 2007-ல் அல்லயன்ஸ் வெளியிட்டது.பிரதமர் மோடி எழுதிய நூலின் தமிழ் பெயர்ப்பு அட்டைப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x