Published : 25 Dec 2020 07:38 PM
Last Updated : 25 Dec 2020 07:38 PM
ஐஆர்சிடிசி ரயில் பயணச்சீட்டு இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த அவர், பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணையதளம் அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிவற்றை சேர்ந்த அதிகாரிகள், இணைய தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்தனர்.
2014-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி இணைய தளத்தின் சேவைகளை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT