Published : 25 Dec 2020 06:36 PM
Last Updated : 25 Dec 2020 06:36 PM
மேற்கு வங்க விவசாயிகளுக்கு நிதிச் சலுகைகளை அளிக்காமல் தேவையில்லாமல் மம்தா அரசுமீது குற்றச்சாட்டை சுமத்துவதாக மோடி அரசு மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இன்று, நாட்டின் 9 கோடி விவசாய குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ .18,000 கோடியை வழங்கிப் பேசிய பிரதமர் மோடி, ''இன்று ஒரே ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
அவர் மேலும் பேசுகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 லட்சம் விவசாயிகள் இந்த நிதி வசதி பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அந்த மாநில அரசு பரிசோதனை வழிமுறைகளுக்காக வெகுகாலம் நிறுத்தி வைத்துவிட்டது, மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மேற்கு வங்க விவசாயிகள் நிதிச்சலுகைகளை இழந்துவருகிறார்கள்' என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக திரிணமூல் காங்கிரஸ் அரசியல் பலன்களை அறுவடை செய்வதற்காக இப்படி பேசுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சுகுத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் பி.எம். கிசான் நிதி சம்மன் திட்டத்தின் கீழ் மேற்குவங்க விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதிப் பலன்கள் கிடைக்கக்கூடிய சலுகைகளை பறித்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்காக இப்படியெல்லாம் பேசுகிறார். இதன்மூலம் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறது.
மேற்கு வங்க விவசாயிகளுக்கு நிதிச் சலுகைகளை அளிக்காமல் தேவையில்லாமல் மம்தா அரசுமீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இதில் மோடி அரசாங்கத்தின் நோக்கம் என்னவென்றால் அரசியல் பலன்களை அறுவடை செய்வதாகும்.
புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு நாட்டில் ஒப்பந்த விவசாயத்தை மேற்கொள்ளவும் உதவும்
புதிய வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பாராளுமன்றத்தில் மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தியது, இது உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தையும் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. இது சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது கடினமாகி வருகிறது.
மேற்கு வங்க அரசு, கிருஷக் பந்து திட்டத்தின் கீழ், மாநில விவசாயிகளுக்கு ரூ.2,642 கோடியை வழங்கியுள்ளது, விவசாயத் துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சுகுத் ராய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT