Last Updated : 25 Dec, 2020 03:18 PM

1  

Published : 25 Dec 2020 03:18 PM
Last Updated : 25 Dec 2020 03:18 PM

பாஜக அரசின் தோல்வியைக் காட்டும் ஒரு வாழும் நினைவுச்சின்னம்தான் விவசாயிகள் போராட்டம்: அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்.

லக்னோ

பாஜக அரசின் தோல்வியைக் காட்டும் ஒரு வாழும் நினைவுச்சின்னம்தான் விவசாயிகள் போராட்டம் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரும் முன்னாள் உ.பி.முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இன்னும் தீர்வுகாணப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு மாதத்தை எட்டியுள்ளது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிவரும் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளுக்கும் நாட்டின் பல்வேறு மாநில விவசாய அமைப்புகளும் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை நேற்று வழங்கினார்.

டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறிதது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கததில் கூறியுள்ளதாவது:

“வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது.

பாஜகவின் அன்பான பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் நலனுக்காக, விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் ஏழைகள் அனைவரின் நலனை மத்திய அரசு விற்பனை செய்கிறது.

பாஜக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தோல்வியின் ஒரு வாழும் நினைவுச்சின்னமாக விவசாயிகள் போராட்டம் அமைந்துள்ளது"

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x