Published : 25 Dec 2020 12:06 PM
Last Updated : 25 Dec 2020 12:06 PM
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக லடாக்கின் சோ கார் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 42-வது ராம்சார் தளமாகவும், லடாக் யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது ராம்சார் தளமாகவும் சோ கார் ஈரநில வளாகத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
430 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஸ்டார்ட்சா புக் சோ நன்னீர் ஏரி தெற்கிலும், 1800 ஹெக்டேர் பரப்பளவுள்ள உப்புநீர் ஏரி வடக்கிலும் அமைந்துள்ள சோ கார் ஈர நில வளாகம், மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
சர்வதேசப் பல்லுயிர் பரவலாக்கத்திற்கும், சூழலியலைப் பேணுவதன் மூலம் மனித வாழ்க்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் அவசியமான ஈரநிலங்களின் சர்வதேச வலைப்பின்னலை மேம்படுத்திப் பேணிக்காப்பதே ராம்சார் பட்டியலின் நோக்கமாகும்.
உணவு, தண்ணீர், நார், நிலத்தடி நீர் மீட்டுருவாக்கம், நீரைத் தூய்மைப் படுத்துதல், வெள்ளத்தடுப்பு, மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பருவநிலைக் கட்டுப்பாடு ஆகியவற்றில் ஈரநிலங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT