Published : 24 Dec 2020 04:01 PM
Last Updated : 24 Dec 2020 04:01 PM
கடந்த 4 வாரங்களில் இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளனர்; அவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானால் டெல்லி லோக்நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிட் -19 வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் டிசம்பர் 20 அன்று பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தார்.
"உருமாறிய கரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் ஆபத்து குறித்து எங்களிடம் ஆரம்ப சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தான் நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸைத் தொடர முடியாது என்பதை ஒரு கனமான இதயத்தோடு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்," என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கிடையில், 2020 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அனைத்து விமான நடவடிக்கைகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி, இங்கிலாந்திலிருந்து அல்லது இங்கிலாந்து விமானம் நிலையம் வழியாக இந்தியாவுக்கு திரும்பும் அல்லது இந்தியாவில் இறங்கும் அனைத்து பயணிகளும் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கடந்த 4 வாரங்களாக இங்கிலாந்தில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமான பயணிகள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், சோதனைக்குப் பிறகு கரோனா பாசிட்டிவ் முடிவுகள் பெறும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்படுவார்கள். தொடர்ந்து 28 நாட்களுக்கு தினசரி அடிப்படையில் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
ஆகவே, இது தொடர்பாக, லோக் நாயக் மருத்துவமனை நிர்வாகத்தினர், கரோனா தனிமைப்படுத்தப்படும் வார்டுகளுக்கான பிரிவு ஒன்றை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு டெல்லி அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT