Last Updated : 24 Dec, 2020 10:05 AM

2  

Published : 24 Dec 2020 10:05 AM
Last Updated : 24 Dec 2020 10:05 AM

வெளிமாநிலங்களில் பணியாற்றும் உ.பி. தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை: சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகாரிகளை நியமிக்கிறார் முதல்வர் யோகி

புதுடெல்லி

வெளிமாநிலங்களில் பணியாற்றும் உத்தரபிரதேசத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க தன் அதிகாரிகளை அதன் நகரங்களில் நியமிக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். நாட்டில் முதன்முறையாக இதுபோன்ற பணிக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் அதிகாரிகள் அமர்த்தப்பட உள்ளனர்.

நாட்டின் அதிக ஜனத்தொகை உள்ள மாநிலமான இருப்பது உ.பி. இங்குள்ள மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அவற்றை தருவதற்கும் அதிக அளவிலான தொழிற்சாலைகளும் உபியில் கிடையாது. இதனால், அம்மாநிலவாசிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பணியாற்றத் துவங்கி விட்டனர்.

குறிப்பாக இவர்கள் டெல்லி, மகராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் பணியாற்றுகின்றனர்.

கரோனா பரவல் ஊரடங்கின் போது இந்த தொழிலாளர்கள் தங்கள் வீடு திரும்புவதில் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கு உள்ளாகினர். இதற்காக, தன் அரசு அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளர்களாக்கி சம்மந்தப்பட்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு உதவ உ.பி. அரசு ஏற்பாடுகள் செய்தது.

கரோனா பரவலினால் அரசு கணக்கெடுப்பின்படி இதுவரையும் உ.பி.யில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வீடு திரும்பினர். கணக்கில் இல்லாத வகையில் அவர்கள் எண்ணிக்கை மேலும் பல லட்சங்களை எட்டும் வாய்ப்புகளும் உள்ளன.

தற்போது கரோனா பரவல் மெல்ல முடிவிற்கு நிலையில் உ.பி. தொழிலாளர்கள் மீண்டும் வெளிமாநிலங்களில் தம் பணிக்கு சென்று பணியாற்றத் துவங்கி விட்டனர். இவர்களுக்கு

எதிர்காலத்தில் கரோனாவை போல் வேறு பல பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க உ.பி. அரசு முயல்கிறது.

இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் தம் அதிகாரிகளை நியமிக்க உதவ முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார்.

இதன் மீது தனது அரசு அதிகாரிகளுக்கு அவர் நேற்று ஒரு உத்தரவிட்டுள்ளார். அதில் முதல்வர் யோகி, தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளையும் நியமிக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் உ.பி. தொழிலாளர்களின் பல்வேறு வகை பிரச்சனைகளில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடனும் பேசித் தீர்வை எட்ட முயல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நாட்டின் எந்த மாநில அரசுகளும் செய்யாத வகையிலான புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் முதல்வர் யோகி, கரோனா முடிந்தவுடன் உ.பி. தொழிலாளர்களை பணிக்கு அழைக்கும் வெளிமாநில நிறுவனங்கள் தமது அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனக் உத்தரவிட்டிருந்தார். ஏதோ சில காரணங்களால் இந்த உத்தரவு இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படாமல் உள்ளது.

இந்த சூழலில் உ.பி. அரசின் புதிய உத்தரவிற்கு கிடைக்கும் பலனை பொறுத்து ஹைதராபாத், அகமதாபாத், புனே உள்ளிட்ட மேலும் பல நகரங்களில் அமலாக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x