Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM
புயலால் கரை ஒதுங்கிய வங்கதேசத்து கப்பல், நட்சத்திர ஓட்டலாக மாற உள்ளது. இதற்காக வங்கதேச வெளியுறவுத் துறைஅதிகாரிகளுடன் ஆந்திர அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் நிவர் புயலால் வங்கதேச கப்பல் ஒன்று திசைமாறி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய கப்பலை அப்பகுதி மக்கள் மிக அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கப்பலை பார்க்கவே தற்போது அதிகஅளவில் பொதுமக்கள் கடற்கரைக்கு வருகின்றனர். பலர் இந்தகப்பலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மீண்டும் இக்கப்பலை கடலுக்குள் செலுத்தபல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கப்பலை அசைக்க கூட முடியவில்லை. ஆதலால், கப்பலை மீட்கும் முயற்சியைவங்கதேச அரசு கைவிட்டுவிட்டது.
இந்நிலையில், மக்கள் அதிக ஆர்வத்துடன் இந்த கப்பலை பார்த்து விட்டு செல்வதை கவனித்த ஆந்திர மாநில சுற்றுலா துறை அதிகாரிகள், இதுகுறித்து சுற்றுலா துறை அமைச்சருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வங்கதேச கப்பல் உரிமையாளரிடம் பேசி இக்கப்பலை ரூ.10 கோடிக்கு வாங்கி, நட்சத்திர ஓட்டலாக மாற்ற ஆந்திர சுற்றுலா துறைமுடிவு செய்தது. அதன்பேரில் தற்போது கப்பல் உரிமையாளர்களிடமும், வங்கதேச வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வங்கதேசத்து கப்பல் உரிமையாளர் ஒப்புக்கொண்டால், புயலால் கரை ஒதுங்கிய கப்பல், ‘ஓட்டல் நிவர்’ எனும் பெயரில் நட்சத்திர ஓட்டலாக மாற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT