Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM
வரும் 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வுக்கு சாதகமாக வாக்குகள் பிரிவது உறுதியாகி வருகிறது. இங்கு புதிதாக அசாதுதீன் ஒவைஸி அணி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), காங்கிரஸ்மற்றும் ஆம் ஆத்மி என தனித்தனியாக போட்டியிட உள்ளன.
ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவரால் செயல்பட்டு வருகிறது சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி). இது, கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளை பெற்றிருந்தது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட இக்கட்சி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வின் வெற்றிக்கும் உதவியாக இருந்தது. இதனால் உத்தர பிரதேசமாநில அமைச்சராகவும் இருந்தஒம் பிரகாஷ், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். பிறகுமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவருக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் தலைமையில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணி உருவாகிறது. இதில், ஹைதராபாத்தின் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லீம் (ஏஐஎம்ஐஎம்) மற்றும் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரரான ஷிவ்பால் சிங் யாதவின் பிரகதீஷல் சமாஜ்வாதி (லோகியா) கட்சியும் சேருகிறது. இரு தினங்களுக்கு முன் உத்தர பிரசேதம் சென்ற ஒவைஸி அங்கு ஓம் பிரகாஷ் ராஜ்பரை சந்தித்து பேசினார். இதில் இருவருக்குள் உடன்பாடு எட்டியிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், 2022 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிவது உறுதியாகி உள்ளது.
ஏனெனில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக சேர்ந்தகாங்கிரஸும், சமாஜ்வாதி யும் மீண்டும் இணைய போவதில்லை எனஅறிவித்திருந்தன. பிறகு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் இணைந்த பிஎஸ்பி தலைவர் மாயாவதியும் கூட்டணியை முறித்துக் கொண்டார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் வரவிருக்கும் உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. எனவே, உத்தர பிரதேசத்தில் பாஜக.வுக்குஎதிராக சமாஜ்வாதி, மாயாவதியின்பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியோருடன் எஸ்பிஎஸ்பி அமைக்கும் கூட்டணியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT