Published : 18 Dec 2020 03:00 PM
Last Updated : 18 Dec 2020 03:00 PM
மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளதை அடுத்து ஹல்திபாரி தேயிலைத் தோட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து கோரமாரா தலைமை வனவிலங்கு வார்டன் வி.கே. யாதவ் கூறியதாவது:
கடந்த டிசம்பர் 4 அன்று பினாய்குரி ஆற்றங்கரையில் காட்டு யானை ஒன்று இறந்துள்ளது. ஹல்திபாரியில் உள்ள தோட்டப் பகுதியில் காட்டுயானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை பனார்ஹட் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
உடற்கூறு ஆய்விற்கு பிறகான முதற்கட்ட விசாரணையில் இந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழியே வந்த காட்டு யானை தாழ்வான மின்கம்பிப் பட்டதும் மின்சாரம் தாக்கி ஆற்றில் விழுந்து உயிரிழநதுள்ளது என்று தள ஆய்வு தெரிவிக்கிறது.
அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் யானைகள் வருகையைத் தடுக்க உயர்-அழுத்தம் கொண்ட மின்சார கம்பிகள் தாழ்வாக தொங்கவிட்டுள்ளனர். யானைகள் மீது படும்விதமாக தாழ்வாக மின்கம்பிககளை தொங்கவிட்டு மின்சார வேலி அமைப்பது முற்றிலும் சட்டவிரோதமானது ஆகும்.
இது தொடர்பாக கோரமாரா வனவிலங்கு பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வியாழக்கிழமை நடத்திய விசாரணையில் பனார்ஹட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் உதவி மேலாளர் உதய் நெவார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேயிலைத் தோட்டத்தின் மேலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு தலைமை வனவிலங்கு வார்டன் வி.கே. யாதவ் தெரிவித்தார்.
வனத்துறையின்படி, இந்த ஆண்டு ஒன்பது யானைகள் மின்சாரம் காரணமாக வடக்கு வங்கத்தில் இறந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT