Published : 23 Oct 2015 08:20 AM
Last Updated : 23 Oct 2015 08:20 AM

ஆந்திராவின் புதிய தலைநகர் பணிகள் தொடங்கின: நவீன மகா நகரமாக அமராவதி உருவாகும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அனைத்து புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன மகா நகரமாக அமராவதி உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூனில் தெலங்கானா தனி மாநில மாக உதயமானது. தற்போதைக்கு இரு மாநிலங்களுக்கும் பொது வான தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், ஆந்திராவுக்கு தனி தலைநகர் உருவாக்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து, ஆந்திராவுக் கான புதிய தலைநகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்தது. குண்டூர் மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய நகருக்கு அமராவதி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிய தலைநகரான அமரா வதிக்கு அடிக்கல் நாட்டும் விழா குண்டூர் மாவட்டம் தூளூர் மண்டலம் உத்தண்டராயுனி பாளை யத்தில் நேற்று நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். முன்னதாக நடந்த யாக பூஜைகளில் அவர் கலந்துகொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் மற்றும் யமுனை நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மோடி வழங்கினார்.

அமராவதி நகரின் மாதிரி கட்டிட வரைபடங்கள், அமராவதி யின் சரித்திரத்தை கூறும் கண்காட்சி ஆகியவற்றை பிரதமர் பார்வையிட்டார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அமராவதி நகர் தொடக்கப் பணி களால் ஆந்திர மாநிலத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதற்காக ஆந்திர மக்கள் அனை வருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உலக நாடு களில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன மகா நகரமாக அமராவதி உருவாகும். இதற்கான பணியை மேற்கொண் டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வாழ்த்துகிறேன். இந்த விழாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திர முதல்வர் நேரடியாக சென்று அழைத்தது மிகவும் பாராட்டக் கூடியது. இதை வரவேற்கிறேன்.

நமது நாட்டில் புதிய நகரங்களை உருவாக்குவது அவசியம். இதனால்தான் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அமராவதி தலைநகரம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும்.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்ச் மாவட்டம் சீர்குலைந்துபோனது. அப்போது முதல்வராக இருந்த நான், சற்றும் அயராமல் அந்த மாவட்டத்தை ஒரு குறிக்கோளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்டமாக மாற்றிக் காட்டினேன். மன உறுதியும் மக்கள் உறுதுணையும் இருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

முந்தைய ஆட்சியினர் ஆந்திர மாநில பிரிவினையை அவசரகதி யில் மிகவும் பாரபட்சமாக செய்துவிட்டனர். இதனால்தான் இரு மாநிலங்களிலும் சில பிரச்சி னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஆந்திரமும் தெலங்கானாவும் பூகோள ரீதியாக இரண்டாக பிளவு பட்டாலும், தெலுங்கு மக்களின் ஆன்மா ஒன்றுதான். 2 மாநிலங் களும் ஒற்றுமையாக செயல் பட்டால் தேச அரசியலிலும் வளர்ச்சி யிலும் அதிகம் சாதிக்க முடியும்.

மாநில பிரிவினை சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் கட்டாயம் நிறைவேற்றப்படும். அந்த சட்டத்தில் கூறப்பட்ட உறுதி களைவிட இன்னமும் அதிகமா கவே ஆந்திராவுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விழாவில் ஆளுநர் நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீதாராமன், அசோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்ரி, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், ஜப்பான் அமைச்சர் யோசுகே டகாகி மற்றும் மாநில அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் விழாவை காண திரண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x