Published : 04 Oct 2015 12:02 PM
Last Updated : 04 Oct 2015 12:02 PM
ஹைதராபாதில் உள்ள ஒரு நகை கடைக்குள் நேற்று காலையில் புகுந்த மர்ம நபர்கள், உரிமையாளரின் வாயில் ஆசிட் ஊற்றிவிட்டு, 12 சவரன் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஹைதராபாத் நேரேடுமெட் பகுதியில் நகைக் கடை வைத்திருப் பவர் மோகன். இவர் நேற்று காலை யில் கடையை திறந்ததும் 2 பேர் வந்துள்ளனர். நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அவர் நகைகளை காண்பித்தபோது, அதைப் பிடுங்க முயற்சித்துள்ளனர். இதனால் மோகன் சத்தம்போடத் தொடங்கி உள்ளார்.
இதையடுத்து, மர்ம நபர்கள் தாங்கள் கொண்டுவந்த ஆசிட்டை மோகனின் வாயில் ஊற்றிவிட்டு, 12 சவரன் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் பேச முடியாத நிலையில் இருந்த மோகனை, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து சென்று மோகனிடம் விசாரித்தனர். கொள்ளையர்கள் ஹிந்தியில் பேசியது மற்றும்கொள்ளை போன நகை பற்றிய விவரங்களைஅவர் ஒரு காகித்தத்தில் எழுதி போலீஸாரிடம் காண்பித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மோகனின் வயிற்றில் ஆசிட் சென்றதால் குடல் வெந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT