Published : 26 Oct 2015 09:33 AM
Last Updated : 26 Oct 2015 09:33 AM
டெல்லியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் முதல்முறை யாக ஹெலிகாப்டரை அம்மாநில போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டின் தலைநகரான டெல்லி யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்கு வரத்தை சீர்செய்வது, அம்மாநில போக்குவரத்து போலீஸாருக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது.
கண்காணிப்பு கேமராக் கள், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் உட்பட பல்வேறு நவீன கருவிகளை பயன்படுத்தி போக்குவரத்தை சீர்செய்வதில் போலீஸார் தீவிரம் காட்டி வரு கின்றனர். இந்த வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பறந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணி யில் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதற்காக தனியார் ஹெலிகாப்டரை வாட கைக்கு எடுத்து பயன்படுத்தினர்.
இது குறித்து டெல்லி போக்கு வரத்து காவல்துறையின் சிறப்பு ஆணையர் முக்தேஷ் சந்தர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “துர்கா பூஜை மற்றும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடை பெற்ற ஊர்வலங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க இந்த யுக்தி முதல் முறையாக கையாளப்பட்டுள்ளது. இதன் உதவியால் எடுக்கப்பட்ட வீடியோ படங்களாலும் நல்ல பலன் கிடைத்தது” என்றார்.
டெல்லியில் தசரா பண்டிகை முடிந்த பின் துர்கை சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை நதியில் கரைக்கப்பட்டன. அப்போது காலிந்தி குன்ச், குத்சியா காட் ஆகிய பகுதிகளில் போக்கு வரத்தை நெரிசலை சமாளிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம் வாடகையில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலி காப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த வியாழக் கிழமை டெல்லி காவல்துறை சார் பில் அனுப்பப்பட்ட யோசனையை மத்திய உள்துறை அமைச்சகம் மறுநாளே ஏற்றுக்கொண்டது. இதை யடுத்து நேற்று முன்தினம் ஹெலி காப்டர் பயன்படுத்தப்பட்டது.
இது வெற்றிகரமாக அமைந்த தால், சொந்தமாகவே ஹெலிகாப்டர் வாங்க டெல்லி போலீஸார் யோசித்து வருவதாகக் கூறப்படு கிறது. இதற்கான கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு டெல்லி காவல்துறை விரைவில் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT