Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் எச்சரிக்கை

நெருப்புடன் விளையாட வேண் டாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, ஆளுநர் ஜெக்தீப் தன்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு சென்றார். அப்போது நட்டாவுடன் வந்த பாதுகாப்பு வாகனங்கள் மீது ஒரு கும்பல்கற்களை வீசி தாக்கியது. இந்த சம்பவத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநில ஆளுநர் ஜெக்தீப் தன்கார் நேற்று கூறியதாவது:

தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் நேற்று மேற்கு வங்கம்வந்தபோது அவரது பாதுகாப்புவாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு போலீஸார், அரசு அதிகாரிகளின் உதவியுடன் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்தியஅரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீதான தாக்குதல் தொடர்பாக தான் வெளியிட்ட கருத்துகளை முதல்வர் மம்தா திரும்பப் பெற வேண்டும். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அரசே விசாரிக்கும்

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலர் அல்பான் பந்தோபாத்யாயா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம்அனுப்பியுள்ளார். அதில், “நட்டாவருகையின்போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலஅரசு செய்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக மாநில அரசேவிசாரணை நடத்தும். இந்தவிவகாரத்தில் இதுவரை 7 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்” எனகூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் சம்மனை ஏற்று,வரும் 14-ம் தேதி தலைமைச் செயலரும், போலீஸ் டிஜிபியும் உள்துறை அமைச்சகத்தின் முன்ஆஜராக தேவையில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x