Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் முகேஷ்அம்பானி இருக்கிறார். இவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக அம்பானி குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகாஷ் அம்பானிக்கும் (29) வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகாவுக்கும் திருமணம்நடைபெற்றது. ஆகாஷ் மற்றும்இஷா ஆகியோர் இரட்டையர்களாவர்.

மூன்றாவது மகன் அனந்த் அம்பானிக்கு 25 வயதாகிறது. திருபாய் அம்பானி, கோகிலா பென் அம்பானியின் கொள்ளுப் பேரனை கொஞ்சி மகிழ தயாராகி விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x