Published : 09 Dec 2020 12:10 PM
Last Updated : 09 Dec 2020 12:10 PM

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு: 21 மாவட்ட ஊராட்சிகளில் 11-ல் பாஜக வெற்றி

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கடந்த நவம்பர் 23, நவ.27, டிசம்பர் 1, டிச.5 என 4 கட்டங்களாக ராஜஸ்தானில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத் சமிதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4,371 பஞ்சாயத்து சமிதி, 636 ஜில்லா சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

4371 வார்டுகளில் 1835 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 1718 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 413 இடங்களில் வென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ், ஜில்லா பரிஷத் தேர்தலில் கிராமப்புற வாக்காளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றி கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு முன்னாள் பாஜக தலைவர் ஹனுமான் பேனிவாலின் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுத் தந்ததுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சியான இக்கட்சி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நகாவூர் பகுதியில் ஹனுமன் பேனிவால் கிங் மேக்கர் என அறியப்படுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, பகுஜன் சமாஜ் கட்சி 3, தேசியவாத கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x