Published : 09 Dec 2020 11:23 AM
Last Updated : 09 Dec 2020 11:23 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 97 லட்சத்த்தைத் தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 லட்சத்து 35 ஆயிரத்து 850 என்றளவில் உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 97 லட்சத்து 35 ஆயிரத்து 850 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் பலியான நிலையில் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 360 ஆக உள்ளது.
இதுவரை, கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 92 லட்சத்து 15 ஆயிரத்து 581. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 36 ஆயிரத்து 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே தொடர்ந்து மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. அங்கு 74,460 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இரண்டாவதாக கேரளாவில் 59 ஆயிரத்து 873 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மூன்றாவதாக, தலைநகர் டெல்லியில் 22,310 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 14 கோடியே 98 லட்சத்து 36 ஆயிரத்து 767 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 10,22,712 மாதிரிகள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இத்தகவலை இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT