Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM
பாபர் மசூதி - ராமர் கோயில் நிலப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அயோத்திக்கு அதிக முக்கியத்
துவம் அளிக்கப்படுகிறது. இங்குகட்டப்படும் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் மத்திய அரசு மற்றும்உத்தரபிரதேச அரசால் செய்யப்படுகின்றன.
இந்த வகையில், டெல்லியில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் விரைவாக வந்து செல்லும்வகையில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்படுகிறது. நாட்டில் புல்லட் ரயில் இயக்க மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் (என்எச்எஸ் ஆர்சி) இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளது. டெல்லியை ஒட்டி, உத்தரபிரதேசத்தின் ஜேவரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புல்லட்ரயில் புறப்படும். இந்த வழித்தடத்தில் மதுரா, ஆக்ரா, கான்பூர்,பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெறும்.
விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்கு தரைவழி ஆய்வுடன் வான்வழி ஆய்வும் செய்யப்படுகிறது. லைட்டிடெக் ஷன் அண்ட் ரேஞ்சிங்சர்வே தொழில்நுட்ப உதவியுடன்ஹெலிகாப்டரில் இருந்து வான்வழி ஆய்வு செய்யப்பட உள்ளது.இதன் மூலம் துல்லியமான அறிக்கை தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தொழில்நுட்பத்தில்தான் நாட்டில் முதன்முதலாக
அமையவுள்ள அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் பாதையின் விரிவான திட்ட அறிக்கையும் தயாரானது. டெல்லி – அயோத்தி புல்லட் ரயில் பாதையின் விரிவான திட்ட அறிக்கைப் பணிகள் தொடங்கிய12 வாரங்களில் முடித்து,அரசிடம் டிபிஆர் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
புல்லட் ரயில் தொடர்பானஅறிவிப்பை வரும் நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT