Published : 08 Dec 2020 04:45 PM
Last Updated : 08 Dec 2020 04:45 PM
கரோனா புதிய பாதிப்பை விட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குணமடைந்தோர் சதவீதம் 94.59 சதவீதமாக உள்ளது.
5 மாதங்களுக்குப் பின், தினசரி கோவிட் பாதிப்பு 27 ஆயிரத்துக்கும் குறைந்தது. கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கும் கீழ் (26,567) குறைந்தது. இது கடந்த 5 மாதங்களில் மிகக் குறைவு. கடந்த ஜூலை 10ம் தேதி, தினசரி தொற்று பாதிப்பு 26,506 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சாதனையாக, நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், இன்று 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3.83 லட்சமாக (3,83,866) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 3.96 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 39,045 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 12,863 பேர் குறைந்தனர்.
புதிய பாதிப்பை விட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குணமடைந்தோர் சதவீதம் 94.59 சதவீதமாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,78,946 ஆக உள்ளது.
தினசரி கோவிட் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT