Published : 06 Dec 2020 11:09 AM
Last Updated : 06 Dec 2020 11:09 AM
அவுரங்காபாத் நகர பேருந்து நடத்துனர்களுக்கு இனி உடல் கேமராக்கள் பொருத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவுரங்காபத்தில் ஊரடங்கு காலத்தில் கோவிட் 19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த மாதத்திலிருந்து நகரப் பேருந்துகள் மீண்டும் சாதாரண பயணிகளுக்கான சேவையை தொடங்கின. நீண்ட மாதங்களுக்குப் பிறகு பயணிகளை ஏற்றிச்செல்வதால் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதாக அவுரங்காபாத் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (ஏஎஸ்சிடிசிஎல்) தெரிவித்துள்ளது.
இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்பு, நகரப் பேருந்துகளின் சில பெண் நடத்துனர்களிடம் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் சிலர் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் வந்தன.
பயணிகள், பெண் நடத்துநர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ஏஎஸ்சிடிசிஎல் நிர்வாகம் நகரின் பேருந்து நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் ஆய்வாளர்கள் விரைவில் உடல் கேமராக்கள் பொருத்தப்படுவார்கள் என்று முடிவு செய்துள்ளது. இதன்படி பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் ஆய்வாளர்களின் சட்டைகளின் முன் பாக்கெட்களில் உடல் கேமராக்கள் நிறுவப்படும்.
இதனால் கடமைகளின் போது வாகனங்களின் செயல்பாடுகளை பதிவு செய்யவும் டிக்கெட்டுகளை நிகழ்நேர பரிசோதனை செய்வதற்கும், பேருந்துகளில் பிற நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவும் கேமராக்கள் உதவும்.
பயணிகளின் டிக்கெட்டுகளையும் அவர்களின் நடத்தையையும் சரிபார்க்க முன்னாள் பாதுகாப்புப் படையினர் பேருந்து போக்குவரத்து ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பயணிகளின் கருத்துக்களையும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள்.
மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்கள் இந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT