Published : 05 Dec 2020 02:51 PM
Last Updated : 05 Dec 2020 02:51 PM
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் வாரியங்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.
புதுடெல்லியில், மத்திய வக்ஃப் வாரியக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அவர், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் பின்னரே இது சாத்தியமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் உள்ள வக்ஃப் சொத்துகள் முறையாக பயன்படுத்தப்படுவதை வக்ஃப் வாரியம் உறுதி செய்யும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் சொத்துகளில் கல்வி மற்றும் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு போதுமான நிதி உதவியை பிரதமரின் ஜன் விகாஸ் கார்யக்கிராம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான வக்ஃப் சொத்துகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் உள்ளதாகவும், இவற்றைப் பதிவு செய்யவும், டிஜிட்டல்மயமாக்கவும், புவியியல் குறியீடு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவை விரைவில் நிறைவடையும் என்றும் அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT