Published : 02 Dec 2020 04:18 PM
Last Updated : 02 Dec 2020 04:18 PM

சந்தைகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சந்தைகளில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சில்லறை வணிகம் மற்றும் மொத்த வியாபாரத்திற்கு இந்த வழிமுறைகள் பொருந்தும். கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியில் அமைந்துள்ள சந்தைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகளின்படி, சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், முறையான சுவாச விதிமுறைகளைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட கோவிட் -19க்கு உகந்த நடத்தை முறைகள், சந்தைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

சுற்றுப்புற சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தினசரி நடவடிக்கைகள் தொடங்கும் முன்னர், கடைகளில் உள்ள அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்; அடிக்கடி உபயோகிக்கப்படும் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்; கடைகளின் நுழைவுவாயிலில் கிருமி நாசினியை உபயோகிக்க வேண்டும்; கழிவறை, கைகளை சுத்தம் செய்யும் இடம் மற்றும் குடிநீர் வசதி உள்ள இடங்கள் ஆகியவை தினசரி 3-4 முறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் குறைந்த அளவிலான வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் நுழையும் வாயிலையும், வெளியே செல்லும் வாயிலையும் தனித்தனியே அமைக்கலாம்; சந்தைப் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் வாகனங்களுக்குத் தடை விதித்து, பாதசாரிகள், மிதிவண்டிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம்; இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கும் வசதியை ஊக்கப்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x