Last Updated : 29 Oct, 2015 08:16 AM

 

Published : 29 Oct 2015 08:16 AM
Last Updated : 29 Oct 2015 08:16 AM

மதத்தின் பெயரால் பெண்களுக்கு பாரபட்சம்: பொதுநல வழக்கு பதிவு செய்ய உத்தரவு

மதத்தின் பெயரால் பெண்களுக்கு பாரபட்சம் இழைக்கப்படுவது குறித்து விசாரிக்க, தனியாக பொது நல வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்த பெண் சொத் துரிமை குறித்த வழக்கில், வழக்கறி ஞர்கள் பல கோணங்களில் விவாதம் நடத்தினர். அதில் மத அடிப்படை யில் பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விவாகரத்து விஷயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக் கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அனில் தவே மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல், பிறப்பித்த மற்றொரு உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும், முஸ் லிம் பெண்கள் மத அடிப்ப டையில் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர் என்ற வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப் பட்டிருந்தாலும், அவர்கள் மதத் தால் பாதிக்கப்படுகின்றனர். முதல் திருமணம் செயலில் இருக்கும் போதே கணவர் இரண்டாவது திரு மணம் செய்வது, விவாகரத்து ஆகியவற்றில் இருந்து அவர்க ளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ‘முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பாதுகாப்பு சட்டம்-1986’ அரசியல் சாசன அமர்வு விசாரணையில் இருந்து வருவதால், இந்த விஷயத் தில் தலையிட முடியாது என்று ஏற்கெனவே ஒரு தீர்ப்பில் இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அரசின் கொள்கை முடிவாக கருத முடியாது. பெண்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகவே கருத முடியும்.

எனவே, அரசியல் சாசன அமர்வில் உள்ள விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை. பெண் கள் கவுரவமாக வாழ அரசியல் சட்டத்தில் உரிமை அளிக்கப் பட்டுள்ளது. அதை அவர்கள் கோர முடியும். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கெனவே அளித்துள்ள ஒரு தீர்ப்பில், “பலதார மணம் என்பது மக்களின் இறையாண்மைக்கு தீங்கானது. ‘சதி’ நடைமுறையை எப்படி அரசு கையாண்டதோ, அதேபோல் இதையும் கையாள முடியும். ஒருதார மணம் என்பது சட்டரீதியாக செல்லத்தக்கது. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு எதிரானது என்று ரத்து செய்ய முடியாது” என்று கூறியுள்ளது.

இதுபோன்று கிறிஸ்தவர்கள் பின்பற்றும் நடைமுறையிலும் பார பட்சம் உள்ளது. திருமணம், சொத் துரிமை தொடர்பான சட்டங்கள் மத உரிமைகளின் கீழ் வராது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களும் மாற வேண்டும். இந்த அம்சங்களை மட்டும் விவாதித்து முடிவெடுக்க தனி பொதுநல வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி, வேறு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மற்றும் டெல்லி தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x