Last Updated : 29 Nov, 2020 10:28 AM

 

Published : 29 Nov 2020 10:28 AM
Last Updated : 29 Nov 2020 10:28 AM

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி: 9 பேர் காயம்

கோப்புப்படம்

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் வைத்திருந்த கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஆஃப் அதிகாரி (கோப்ரா பிரிவு) ஒருவர் பலியானார். 9 வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று சிஆர்பிஎஃப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள சின்தால்நார் வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, இரவு 9 மணி அளவில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த கன்னிவெடி வெடித்ததில் சிஆர்பிஎஃப் கமாண்டர் மற்றும் 9 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துணை கமாண்டர் நிதின் பலேராவ் (வயது 33) உள்ளிட்ட 10 கமாண்டோ வீரர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். இதில் 7 கமாண்டோ வீரர்கள் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையிலும், இருவர் சின்தால்நார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் துணை கமாண்டர் நிதின் பலேராவ் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். நிதின் பலேராவ், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010-ல் சிஆர்பிஎஃப் பிரிவில் சேர்ந்த இவர், 2019-ல் கோப்ரா பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சிஆர்பிஎஃப் பிரிவின் கமாண்டோ கோப்ரா பிரிவின் 206-வது பட்டாலியன் பிரிவினர், மாவோயிஸ்ட் ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து சத்தீஸ்கர் போலீஸாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x