Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி ஆய்வு: ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு பாராட்டு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். படம்: ஏஎப்பி

ஹைதராபாத் / புதுடெல்லி

அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிர தமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களுக்கு தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழு வதும் பரவி, லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த 2 நாடுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இறுதிகட்ட பரிசோதனை

இதையடுத்து, கரோனா வைர ஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில் உலக நாடு கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல், ரஷ்யா, பிரிட்டன் உள் ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள், முதல் 2 கட்ட பரிசோதனைகளை நிறைவு செய் துள்ளன. தற்போது இறுதிகட்ட பரிசோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருந்துகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. குறிப்பாக ரஷ்யா தயா ரித்து வரும் மருந்துதான் முதலில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த 3 நிறுவனங்களின் மருந்து களும் 2 மற்றும் 3-வது கட்ட பரி சோதனையில் இருக்கும் நிலை யில், மருந்து தயாரிப்பு பணிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். அதன் படி, 3 நிறுவனங்களுக்கும் அவர் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 9 மணி அளவில் அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோ தர் தொழிற்பூங்காவில் அமைந் துள்ள ஜைடஸ் கேடில்லா நிறு வனத்துக்கு பிரதமர் சென்றார். அவரை ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வரவேற்றார். பின்னர், நிறுவனத்தின் நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

தனிநபர் பாதுகாப்பு கவச (பிபிஇ) ஆடை, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர், கரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பரிசோதனையில் ஏற் பட்டுள்ள முன்னேற்றம், தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டு பரி சோதனைக்கு உள்ளாகியுள்ளவர் கள் குறித்து பிரதமரிடம் ஆராய்ச்சி யாளர்கள் விளக்கமாக எடுத்துரைத் தனர். பிரதமரும் பல்வேறு சந்தே தகங்களைக் கேட்டு விளக்கங் களை பெற்றுக் கொண்டார்.

இந்த நிறுவனம் சார்பில் தயா ரிக்கப்படும் தடுப்பு மருந்தானது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார், ஒரு மணிநேரம் கேடில்லா நிறு வனத்தில் இருந்த பிரதமர் மோடி, காலை 11.30 மணிக்கு ஹைதராபாத்துக்கு புறப்பட்டார்.

தேவையான உதவிகள்

இதுபற்றி பிரதமர் வெளி யிட்ட ட்விட்டர் பதிவில், ‘அகமதா பாத்தில் உள்ள ஜைடஸ் கேடில்லா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கரோனா வைர ஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ-வை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களை கேட்டறிந்தேன். இந்தப் பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சி யாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இந்த மருந்து தயா ரிக்கும் குழுவின் பயணத்துக்கு தேவையான உதவிகளை அளித்து, மத்திய அரசு துணையாக இருக் கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங் கப்படும்’ என குறிப்பிட்டுஉள்ளார்.

இதைத் தொடர்ந்து ஹைதரா பாத் வந்த பிரதமர் மோடியை, ஹக்கிம்பேட்டை விமான நிலையத் தில் தெலங்கானா முதன்மைச் செயலாளர் சோமேஷ்குமார், டிஜிபி மகேந்தர் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அங் கிருந்து ஜெனோம்வேலி பகுதியில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் மருத்துவ நிறுவனத்துக்கு பிரதமர் காரில் சென்றார். அவரை மருத் துவ வல்லுநர்கள் குழு வரவேற் றது. அவர்களுடன் சுமார் 1 மணி நேரம் பிரதமர் கலந்துரையாடி னார். தற்போது 3-ம்கட்ட பரி சோதனையில் உள்ள கரோனா தடுப்பு மருந்தை எப்போது மக் களுக்கு விநியோகம் செய்யலாம், முதல்கட்டமாக எவ்வளவு மருந்துகளை உற்பத்தி செய்ய இயலும், ஒரு நாளைக்கு எத்தனை மருந்துகள் உற்பத்தி செய்யலாம், நமது தேவைக்கு போக, பிற நாடுகளுக்கும் நம்மால் எவ்வளவு தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களை நிபுணர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

புனேவில் ஆய்வு

ஹைதராபாத்தில் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டி டியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த இன்ஸ்டிடியூட்டில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனக்கா நிறு வனம் இணைந்து கண்டுபிடித் துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

அந்தப் பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, நிபுணர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். நிறு வனத்தை பார்வையிட்டு முடித்த தும், பிரதமர் டெல்லி திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x