Published : 28 Nov 2020 12:30 PM
Last Updated : 28 Nov 2020 12:30 PM
மும்பையின் மிகப்பெரிய காபி ஷாப் நிறுவனத்தின் வலைதளத்தை ஹேக் செய்ததாக 17 வயது சிறுவன் சைபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
காபி ஷாப் நிறுவனத்தின் கணினி வலைப் பின்னலிலிருந்து பணப் பரிமாற்றத்தை தனது நண்பருக்கு வேடிக்கைக்காக அச்சிறுவன் மாற்றியுள்ளதாகவும் சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
சிறுவன் குறித்த பெயரைக் குறிப்பிடாமல் அவர் மேலும் கூறியதாவது:
இச்சிறுவன் ஒரு புத்திசாலி மாணவர். நன்றாக படிக்கக்கூடியவர். அவர் தற்போது அக்கவுண்டன்ஸி படித்து வருகிறார். மும்பையின் மிகப்பெரிய காபி ஷாப் நிறுவனத்தின் வலைதளத்தை இச்சிறுவன் ஹேக் செய்துள்ளார்.
இச்சிறுவன், நாட்டின் பல்வேறு நகரங்களில் கிளைகள் வைத்துள்ள காபி ஷாப் நிறுவனத்தின் கணினி வலைப் பின்னலிலிருந்து பணப் பரிமாற்றத்தை தனது நண்பருக்கு வேடிக்கைக்காக மாற்றியுள்ளார்.
காபி ஷாப்பில் பொருத்தப்பட்டிருந்த தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் இச்சிறுவன்தான் நிறுவனத்தின் வலைதள கணக்கை ஹேக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காபி ஷாப் நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் இச்சிறுவன் மீது கடந்த செப்டம்பம் 28 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அச்சிறுவன் அவர் தனது நண்பர்களைக் கவரவும் வேடிக்கையாகவும் இந்த செயலைச் செய்ததாக எங்களிடம் கூறினார். அவர் யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அச்சிறுவன், சிறார் நீதிமன்றக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நன்னடத்தை ஜாமீனில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இரண்டு வருட காலத்திற்கு ஆலோசனை பெறும்படி சிறார் நீதிமன்றக் குழு அவரைக் கேட்டுக் கொண்டது.
இவ்வாறு சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT