Published : 27 Nov 2020 10:19 PM
Last Updated : 27 Nov 2020 10:19 PM
நிவர் புயலை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வங்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சேதமும் ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது நிவர் புயல் மற்றும் கடும் மழையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.’’ என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
நிவர் புயல் மற்றும் கடுமையான மழை காரணமாக தமிழகம் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் நிலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நிவர் புயலை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள மத்திய குழு அனுப்பி வைக்கப்படும்.
புயல் மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT