Published : 24 Nov 2020 07:20 PM
Last Updated : 24 Nov 2020 07:20 PM
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ், தேவையான பரிசோதனைகள் மற்றும் ஒப்புதலுக்கு பிறகு ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் விநியோகிக்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
சுமார் 30 கோவிட்-19 தடுப்பு மருந்துகள் தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் கொவாக்சின், மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கொவிஷீல்ட் ஆகியவை முன்னேறிய கட்டத்தில் உள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் முதல் காணொலி இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேசிய அவர், கோவிட்-19 போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ள பல்முனை ஒத்துழைப்பு முக்கியம் என்றார்.
தற்போதைய கரோனா பெருந்தொற்று உட்பட சமுதாயத்தின் பொதுவான சவால்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஒன்றிணையுமாறு ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ், தேவையான பரிசோதனைகள் மற்றும் ஒப்புதலுக்கு பிறகு ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் விநியோகிக்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
நமது தலைசிறந்த நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, கோவிட்-19 தடுப்பு மருந்தின் பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளது. அனைத்து முக்கிய தொடர்பு மருந்துகளில் பரிசோதனைகளும் இந்தியாவில் நடைபெறுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை செய்து வருகிறது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT