Published : 24 Nov 2020 06:14 PM
Last Updated : 24 Nov 2020 06:14 PM
டிக்டாக், பப்ஜி செயிலிகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீன செயலிகள். அவற்றில் 4 அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமானவை.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்திய சைபர் குற்றப் பிரிவு ஒருங்கிணைப்பு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் அனைத்தும் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாக வந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன் எவை?
AliSuppliers Mobile App
Alibaba Workbench
AliExpress - Smarter Shopping, Better Living
Alipay Cashier
Lalamove India - Delivery App
Drive with Lalamove India
Snack Video
CamCard - Business Card Reader
CamCard - BCR (Western)
Soul- Follow the soul to find you
Chinese Social - Free Online Dating Video App & Chat
ate in Asia - Dating & Chat For Asian Singles
WeDate-Dating App
Free dating app-Singol, start your date!
Adore App
TrulyChinese - Chinese Dating App
TrulyAsian - Asian Dating App
ChinaLove: dating app for Chinese singles
DateMyAge: Chat, Meet, Date Mature Singles Online
AsianDate: find Asian singles
FlirtWish: chat with singles
Guys Only Dating: Gay Chat
Tubit: Live Streams
WeWorkChina
First Love Live- super hot live beauties live online
Rela - Lesbian Social Network
Cashier Wallet
MangoTV
MGTV-HunanTV official TV APP
WeTV - TV version
WeTV - Cdrama, Kdrama&More
WeTV Lite
Lucky Live-Live Video Streaming App
Taobao Live
DingTalk
Identity V
Isoland 2: Ashes of Time
BoxStar (Early Access)
Heroes Evolved
Happy Fish
Jellipop Match-Decorate your dream island!
Munchkin Match: magic home building
Conquista Online II
கடந்த ஜூன் மாதம் சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டன.
தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. நிலையில் இன்று மேலும் 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT