Published : 23 Nov 2020 09:25 PM
Last Updated : 23 Nov 2020 09:25 PM
காதல் உணர்வுக்கும் ஜிகாத்துக்கும் எந்தத் தொடர்ப்பு இல்லை. ஆகையால் மத அரசியல் செய்யாதீர் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நுஸ்ரத்திடம் லவ் ஜிகாத்துக்கு எதிராக உ.பி., ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம் இயற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நுஸ்ரத், "காதல் உணர்வுக்கும் ஜிகாத்துக்கும் எந்தத் தொடர்ப்பு இல்லை. காதல் தனிநபரின் உரிமை. யார் யார் மீது அன்பு செலுத்த வேண்டுமென்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. காதலுக்கும் ஜிகாத்துக்கும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யக்கூடாது. தேர்தல் வேளையில் இதுபோன்ற விஷயங்களை முன்னிறுத்து மத அரசியல் செயக்கூடாது. மதத்தை அரசியல் ஆயுதமாக மாற்றாதீர்கள்" எனத் தெரிவித்தார்.
லவ் ஜிகாத்தை தடுக்கபோவதாக உ.பி. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகா மாநிலங்கள் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஜூனாபூரில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில் “ மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார்.
யோகியின் பேச்சைத் தொடர்ந்து லவ் ஜிகாத் மீண்டும் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
லவ் ஜிகாத் என்ற வார்த்தையே பாஜகவால் தயாரிக்கப்பட்டது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT