Published : 22 Nov 2020 08:31 PM
Last Updated : 22 Nov 2020 08:31 PM
ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்துவதில் 5 தொழில்நுட்பங்களை, ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் வடிகால் துறை தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் 3 தொழில்நுட்பங்கள் குடிநீர் விநியோகம் தொடர்பானது, 2 கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பானவை. இந்த தொழில்நுட்பங்கள் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்துவதில் மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஜல் ஜீவன் திட்டத்தித்தை அமல்படுத்துவதில் சவால்களை சந்தித்தால், இதற்கு புதுமை தொழில்நுட்ப தீர்வுகள் ஆன்லைன் மூலம் கோரப்பட்டிருந்தன. இதற்கு 87 பேர் விண்ணப்பித்தனர். இதில் இறுதியாக 5 தொழில்நுட்பங்களை தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது. அவற்றின் விவரம்:
1) கிரண்ட்ஃபோஸ் அக்ப்யூர், - வடிகட்டுதலின் அடிப்படையில் சூரிய மின் சக்தி நீர் சுத்திகரிப்பு நிலையம்.
2) ஜனாஜல் வாட்டர் ஆன் வீல் - ஜிபிஎஸ்ஸை அடிப்படையாகக் கொண்ட மின்சார வாகனம். வீடுகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்க உதவுகிறது.
3) ப்ரெஸ்டோ ஆன்லைன் குளோரினேட்டர் - தண்ணீரில் கிருமி நீக்கம் செய்வதற்கான மின்சாரம் அல்லாத ஆன்லைன் குளோரின் இயந்திரம்.
4) ஜோகாசோ தொழில்நுட்பம் - நிலத்தடியில் நிறுவக்கூடிய, காற்று மற்றும் காற்றில்லா முறையில் இயங்கும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்புக் கருவி.
5 ) எஃப்பி டெக் - வடிகட்டியுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT