Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று காலை தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தார். பின்னர் அவர் திருமலையில் உள்ள விடுதியில் இரவு தங்கினார். அப்போது, அவரை திருமலை ஏஎஸ்பி முனுசாமி வரவேற்றார். ஒரு முதல்வரை தேவஸ்தான உயர் அதிகாரிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், தமிழக முதல்வரை ஒரு போலீஸ் அதிகாரி வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று காலை விஐபி பிரேக் நேரத்தில் முதல்வர் பழனிசாமி தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.
பின்னர், கோயில் ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தீர்த்த பிரசாதங்களையும், சுவாமியின் திரு உருவப் படத்தையும் வழங்கி கவுரவித்தார். முதல்வருடன் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான குமரகுரு, தலைமை கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி, கோயில் இணை அதிகாரி ஹரிநாத் ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT