Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
கரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் மிகவும் சிறப்பாக செய்வதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய ஊடக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய பிரஸ் கவுன்சில் சார்பில் காணொலி காட்சி மூலம்‘கரோனா காலத்தில் ஊடகத்தின்பங்கும் மற்றும் அதன் தாக்கமும்’என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியை இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் படித்தார். வாழ்த்துச் செய்தியில் மோடி கூறியிருந்ததாவது:
தேசிய ஊடக தினத்தை இந்திய பிரஸ் கவுன்சில் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். கணொலிக் காட்சி மூலம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் வதன் மூலம் தொழில்நுட்பத்தின் சக்தி தெரியவருகிறது. இதற்கு முன் இல்லாத வகையில் கரோனா தொற்றை எதிர்த்து உலகமே ஒன்றுபட்டு நிற்கிறது. கரோனாவுக்கு எதிராக இந்தியாவின் 130 கோடி மக்களும் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கரோனாகுறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.
கரோனா காலத்துக்குப் பிந்தைய உலகில் இந்தியா தனது திறமையாலும் தொழில்துறை திறனாலும் உலகில் முன்னணியில் நடைபோடும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்போம் என்ற பிரச்சாரத்தையும் செய்தியையும் ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்கிறது. உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகிற்கு இந்தியாவின்சக்தியும் திறமையும் எல்லாதுறைகளிலும் தேவைப்படுகிறது. இந்தியாவின் திறமையை உலகம் முழுவதும் பலமாகஉறுதிப்படுத்துவதில் ஊடகங்கள்முக்கிய பங்காற்றுகின்றன.
இம்முயற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழிகாட்டியாக இருந்து நமது துடிப்பான ஊடகப் பரப்பை வலுப்படுத்துகிறது. குடிநீர் பாதுகாப்பு, தூய்மைஇந்தியா திட்டம் போன்ற அரசின்பல திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படவும் ஊடகங்களின் பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
தேசிய ஊடக தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஊடக தினத்தில்பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழத்துகள். நமது மாபெரும் தேசத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்துவதில் நமது ஊடக சகோதரர்கள் அயராது உழைத்து வருகின்றனர். பத்திரிகைசுதந்திரத்தை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி அரசுஉறுதியாக உள்ளது. பத்திரிகைசுதந்திரத்தை ஒடுக்க முயற்சிப் பவர்களை கடுமையாக எதிர்த்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில்ஊடகங்களின் சிறப்பான பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தேசியஊடக தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “தேசிய ஊடக தினத்தில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் குடிமக்களுக்கு தகவல்களை கொண்டு செல்வதிலும் அவர்களை அதிகாரம் பெறச்செய்வதிலும் ஊடகம் முக்கியப் பங்காற்றுகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஊடகவியலாளர்களை நான் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT