Last Updated : 25 Oct, 2015 12:49 PM

 

Published : 25 Oct 2015 12:49 PM
Last Updated : 25 Oct 2015 12:49 PM

பிஹார் தேர்தல்: மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் அதிகரிப்பு

பிஹார் சட்டப்பேரவைக்கு பாக்கி இருக்கும் மூன்று கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்தர மோடியின் பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கட்டங்களாக கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கிய பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு இதுவரை இரண்டு கட்டங்கள் முடிந்துள்ளன. இதில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் முக்கிய தேர்தல் பிரச்சாகராக பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். பாக்கி உள்ள மூன்று கட்டங்களில் பிரதமர் மோடிக்காக 11 பிரச்சாரக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அதன் எண்ணிக்கை 16 முதல் 20 வரை என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, கடைசிகட்ட தேர்தலுக்குள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாரதிய ஜனதாவின் பிஹார் மாநில நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘பிஹார் தேர்தல் துவங்கியது முதல் பாஜக, சிவசேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் கூறப்பட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதை லாலு மற்றும் நித்திஷின் மகா கூட்டணி தமக்கு சாதகமாக மேடைகளில் பயன்படுத்தி வருகிறது. இவர்களை சமாளிக்க பிரதமரின் பிரச்சாரக் கூட்டம் மிகவும் அவசியம் எனக் கருதுகிறோம்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு கட்டத் தேர்தல்களிலும் தீவிரப் பிரச்சாரம் செய்த மோடி, இடையில் வந்த தசராவில் தாம் கடைப்பிடிக்கும் விரதம் காரணமாக இடைவெளி விடப்பட்டது. அடுத்து அக்டோபர் 25 முதல் மோடி துவக்கும் கூட்டங்கள் நவம்பர் 2 ஆம் தேதியுடன் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 5-ல் கடைசிகட்ட தேர்தல் நடைபெறுகிறது.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 ல் இரண்டு கட்டங்களாக 81 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. பாக்கி இருக்கும் மூன்று கட்டங்களில் 162 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதில் இரு கட்டங்களின் 112 தொகுதிகளில் பெரும்பாலனவை கடந்த தேர்தலில் பாஜக வசமானவை எனவே, இந்த தொகுதிகளின் பாஜக தன் பிரச்சாரத்தை தீவிரமாக்கி வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x