Published : 13 Nov 2020 05:43 PM
Last Updated : 13 Nov 2020 05:43 PM

கரோனா: 41-வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம்

புதுடெல்லி

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 41-வது நாளாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மிகவும் கீழே அதாவது 4,85,547 ஆக இருக்கிறது. இது போல தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழே பதிவாகி உள்ளது. மொத்த கரோனா பாதிப்பில் இது 5.55% மட்டுமே.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 44,879 ஆக இருக்கும் நிலையில், இதற்கு மாறாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 49079 ஆக இருக்கிறது. தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையை விடவும் தினமும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்து 41 வது நாளாக நீடிக்கிறது.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 81,15,580 ஆக இருக்கிறது. இதன் மூலம் குணம் அடைந்தோரின் விகிதமானது 92.97% ஆக இருக்கிறது. சிகிச்சைபெறுவோர் மற்றும் குணம் அடைந்தோர் எண்ணிக்கைக்கு இடையேயான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து 76,31,033 ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 547 பேர் நோய்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 80 % வீதம்(79.34%) பேர் பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x