Published : 13 Nov 2020 02:45 PM
Last Updated : 13 Nov 2020 02:45 PM
கோவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் உலகம் ஒன்றிணைந்தது போல், தண்ணீர் பிரச்னைகளை சந்திக்கவும் உலகம் ஒன்றிணைய வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார்.
2-வது தேசிய நீர் விருதுகள் மற்றம் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் செகாவத் பேசியதாவது:
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை. அதேபோல், தண்ணீர் பிரச்னையும் உலகம் முழுவதும் உள்ளது. நம் நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு இந்த விருதுகளை வென்றவர்கள், பாராட்டுக்குரியவர்கள். கோவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் உலகம் ஒன்றிணைந்தது போல், தண்ணீர் பிரச்னைகளை சந்திக்கவும் உலகம் ஒன்றிணைய வேண்டும். பேரழிவிலும் வாய்ப்புத் தேட நாம் அனைவரும் ஆராய வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் முக்கியமானது.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், பிரதமரின் தொலைநோக்கு. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மட்டும் அல்ல, நீர் பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். அடல் பூஜல் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் மேலாண்மை பணிகளையும் ஜல்சக்தி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
ஜல்சக்தியை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் இன்றைய நிகழ்ச்சி சரியான நடவடிக்கை. வாழ்க்கைக்கு தண்ணீர் அடிப்படை என்பதால், எதிர்கால தலைமுறைக்கு, நீர் வளமுள்ள நாட்டை ஒப்படைக்க, நீர் துறையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றினைவது ஒவ்வொருவரின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT