Published : 11 Nov 2020 06:56 PM
Last Updated : 11 Nov 2020 06:56 PM
பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சித் தொண்டர்பகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.
மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.
இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.
பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
#WATCH Delhi: BJP workers take part in the celebrations at BJP headquarters, following the victory of NDA in #BiharElections2020
Prime Minister Narendra Modi will address the party workers shortly. pic.twitter.com/vSkWTr3k7X
பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜே.பி.நட்டா திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பாஜக தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசுகளை வெடித்தும், அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஆடல் பாடலுடன் வரவேற்பு நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT