Published : 11 Nov 2020 04:27 PM
Last Updated : 11 Nov 2020 04:27 PM
உலகளாவிய பெருந்தொற்றான கோவிட்-19-க்கு எதிரான ஒருங்கிணைந்தப் போரில் பல்வேறு மைல்கற்களை இந்தியா இதுவரை கடந்துள்ளது.
இதில் இன்னுமொரு சாதனையாக, தற்போதைய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் கீழ் வந்துள்ளது.
106 தினங்களுக்குப் பின் முதன்முறையாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,94,657 ஆக உள்ளது. இதற்கு முன் 28 ஜூலை அன்று இந்த எண்ணிக்கை 4,96,988 ஆக இருந்தது. இதன் மூலம், இதுவரை பதிவான மொத்த தொற்றுகளில், தற்போதைய பாதிப்புகளின் விகிதம் 5.73 சதவீதமாக உள்ளது.
கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து குறைந்து வருவதை இது காட்டுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர் பரிசோதனைகள், கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றின் மூலமும், மத்திய அரசின் இலக்கு சார்ந்த திட்டங்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சிறப்பாக செயல்படுத்தி வருவதன் மூலமும், மருத்துவர்கள் மற்றும் இதர கோவிட்-19 வீரர்களின் தன்னலமில்லா சேவையின் காரணமாகவும் இது சாத்தியமாகியுள்ளது.
இருபத்தி ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 20,000-க்கும் கீழ் உள்ளது. எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 20,000-க்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன.
இரண்டே மாநிலங்களில் (மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மட்டுமே 50,000-க்கும் அதிகமான பாதிப்புகள் தற்போது உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 44,281 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 50,326 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 39-வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை, புதிய பாதிப்புகளை விட குறைவாக உள்ளது.
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,13,783 ஆக உள்ளது. தற்போதைய பாதிப்புகள் மற்றும் மொத்த தொற்றுகளுக்கு இடையேயான இடைவெளி 75,19,126 ஆகும். குணமடைதல் விகிதம் 92.79 சதவீதமாக உள்ளது.
இது வரை 12 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தி மட்டும் 11,53,294 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT