Published : 11 Nov 2020 03:53 PM
Last Updated : 11 Nov 2020 03:53 PM

அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்லைன் செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் - மத்திய அரசு உத்தரவு  

ஆன்லைன் செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஹாட்ஸ்டார் ஆகியவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

இதற்கான அறிவிக்கை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் கையெழுத்திடப்பட்டது, அரசுக் கட்டுப்பாடுகளின் கீழ் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவையும் வருகின்றன.

ஆன்லை ஊடகங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், செய்திகள் மற்றும் நாட்டுநடப்பு குறித்த உள்ளடக்கங்கள் இனி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

டிஜிட்டல் ஊடகங்களை இதுவரை கட்டுப்படுத்த எந்த ஒரு அரசு அமைப்போ, சட்டமோ இல்லை. இப்போது கொண்டு வரப்படுகிறது.

அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவும், செய்தி சேனல்களை செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பும், விளம்பரங்களை விளம்பரங்கள் தரநிலை கவுன்சிலும், திரைப்படங்களை மத்திய சென்சார் வாரியமும் தணிக்கை செய்து வந்தன.

கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடகச் சுதந்திரத்தை குறைக்கும் தடுக்கும் எதையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று உறுதி வழங்கினார். ஆனால் இப்போது டிஜிட்டல் மீடியாக்களைக் கட்டுக்குள் கொண்டு வருமாறு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x