Published : 10 Nov 2020 02:09 PM
Last Updated : 10 Nov 2020 02:09 PM
ஹரியாணாவின் பரோடா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரு ஒலிம்பிக் மல்யுத்த வீரருமான் யோகேஷ்வர் தத் 10,330 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை விட பின் தங்கியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் இந்து ராஜ் நார்வல் முன்னிலை வகித்து வருவதாக தேர்தல் ஆணைய தகவல் தெரிவித்துள்ளது.
11 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணி முடித்த நிலையில் காங். வேட்பாளர் 35,301 வாக்குகள் பெற்றிருந்தார், பாஜக வேட்பாளர் 24,971 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்
இந்திய தேசிய லோக்தல் வேட்பாலர் ஜோகிந்தர் சிங் மாலிக் 3548 வாக்குகள் பெற்றார், எல்.எஸ் கட்சி வேட்பாளர் ராஜ்குமார் சைனி 3,241 வாக்குகள் பெற்ருள்ளார்.
பரோடா சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாயான இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 20 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
சோனிபட்டி உள்ள மொஹானாவில் 3 அடுக்கு பாதுகாப்பு இடப்பட்டுள்ளது
ஒரு தொகுதியில் 14 வேட்பாளர்கள் நின்றனர். பரோடா சட்டப்பேரவைத் தொகுதி கடந்த ஏப்ரலில் காங். எம்.எல்.ஏ. ஸ்ரீ கிஷன் ஹூடா மறைவையொட்டி காலியானது. ஹூடா இங்கு 2009, 14, 19 ஆகிய ஆண்டுகளில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பாஜக எப்படியாவது இங்கு வெற்றி பெற வேண்டும் என்று பிரயத்தனப்பட்டது. இங்கு பாஜக வென்றதேயில்லை.
2019 சட்டப்பேரவை தேர்தலில் 90 இடங்களுக்கான போட்டியில் பாஜக 40-ல் வென்று ஜேஜேபி கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT